Sunday, January 23, 2011

ஓடி விளையாடாதே பாப்பா

ஊர்ல இருக்கற ஒரு வண்டி அவஸ்தை எல்லாம் பட்டுட்டு மறுபடியும் இந்த வலை உலகம் பக்கம் வந்ததுல ஒரு மகிழ்ச்சி. நிம்மதி. Atleast something feels normal. கடந்த நாலு  மாசத்துல, ஏதாவது ஒரு பகிர்ந்துகொள்ளத்தக்க நிகழ்ச்சி நடக்கும் போதெல்லாம், அடடா இப்பொழுது இதைப் பற்றி எழுத முடியவில்லையே என்ற ஒரு சின்ன யோசனை வரும். அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி தான் இப்போது பேசப் போகிறேன்.

எனக்கு இந்த சின்னக் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் அவ்வளவாக உடன்பாடு கிடையாது. பார்வையாளர்களை கவர்வதற்காக என்று அவர்கள் செய்யும் கண் துடைப்பு நாடகங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அந்த குழந்தைகள் தான். ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ நடக்கும் கூத்து என்றால் கூட மன்னித்துவிடலாம். ஆனால், மாதக் கணக்கில் (சில சமயம் ஒரு முழு வருடத்திற்கு) நீட்டிக்கப்படும் இந்த நிகழ்சிகளில் அடி வாங்குவது குழந்தைகளின் சகஜ வாழ்கையும் அப்பாவித்தனமும் தான். A terrible price to pay for a little bit glory. அம்மாடி ஆத்தாடி, மன்மத ராசா ரகப் பாடல்களை குழந்தைகள் பாடினாலோ அல்லது அவற்றிற்கு ஏற்ப உடம்பை வளைத்து நடனம் ஆடினாலோ, பார்ப்பதற்கே  கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஒரு பிரபல தனியார் தமிழ் சேனலில் சென்ற வருடம் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்குபெற்று மிகவும் பிரபலமானான் ஒரு சிறுவன். சுமாராகத்தான் பாடுவான் என்றாலும் அவன் சுட்டித்தனத்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தான். அவனால் TRP உயர வாய்ப்பு உள்ளதை உணர்ந்த அந்த சேனலும் அவனை Eliminate செய்யாமல் finals வரை போட்டியாளராக வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்த ஒருவரின் உறவினரின் குழந்தை அந்தப் போட்டியில் கலந்து கொண்டதால், மேற்கூறிய சிறுவனை பற்றி சில தகவல்கள் தெரிய வந்தது. அந்த சிறுவனின் பெற்றோர் படு strict டாம். ஸ்டுடியோவில் மற்ற குழந்தைகளுடன் அவன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால் அடித்து இழுத்து வந்து விடுவார்களாம். கேட்டால் குரல் கெட்டு விடும் என்பார்களாம். வீட்டிலும் அவனுக்கு நல்ல அடி உதை விழுமாம், ஒழுங்காக practise  செய்ய வில்லை என்றால். நடுவில் அவன் almost Eliminate ஆகக் கூடிய ஒரு stage வரும் பொழுது, அவனது அப்பா அந்த சேனல் கூட ஒரே சண்டையாம். தன் மகனுக்கு நல்ல demand இருப்பதாகவும், சரியான முறையில் அவர்களை நடத்த வில்லை என்றால் அச்சேனலின்  போட்டி சேனலுக்கு சென்று விடுவதகாவும் மிரட்டி இருக்கிறார்.அவனால் TRP ஏறும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த அந்த சேனல், அவனை Eliminate செய்வதை நிறுத்தியதோடு மட்டும் இல்லாமல் , பல "special gifts" உம் கொடுத்து, அந்த பையனைத் தக்க வைத்துக் கொண்டதாம்.

கேட்கவே ஒரே கொடுமையாக இல்லை? child labour laws இந்த மாதிரி விஷயங்களில் வேலை செய்வதில்லையா என்ன? சந்தர்ப்ப சூழ்நிலைகள் மோசமாக அமைந்து வேறு வழியில்லாமல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி பிழைப்பது பிழை என்றால், மேற்கூறிய உதாரணங்களைப் போல் இருக்கும் பெற்றோரை என்ன செய்வது? ஒரு வேளை அசுரத்தனமான போட்டி இருக்கும் இந்த உலகத்தில், நம் முத்திரையை பதிக்க வேண்டும் என்றால் இப்படி எதாவது செய்தால் தான் முடியுமா?  அல்லது இந்த சிறுவன் வளர்ந்து பெரியவனாகி, ஒரு நல்ல கலைஞனாக வந்து, "என் வளர்ச்சிக்கு அப்பா அம்மா தான் காரணம்" என்று சொல்லி, நம்மை மாறி புலம்பும் ரகத்தை முட்டளாக்கிச் செல்வானோ? ஒன்றும் புரியவில்லை போங்கள்!

2 comments:

  1. ஆமாம் இப்பொதெல்லாம் அந்த பிள்ளை வயதுக்கு மீறிய அளவில் நிகழ்ச்சி தொகுப்பு, விளம்பரம் என்றெல்லாம் வந்து கொண்டிருக்கிறான். நான்கூட நினைத்தேன் இந்தப் பிள்ளையின் படிப்பு கெட்டுப்போகுமே, பாட்டும் ஏற்கனவெ சுமார்தான். சரியாய் கவனம் செலுத்தாவிட்டால், குரல் உடையும் சமயத்தில் இந்த க்யூட்னெஸ் எல்லாம் போய் அப்புறம் எதுக்கும் உபயோகமில்லாமல் போய் விடும்- எதாவது டி வி தொகுப்பாளர் ஆக வேண்டியதுதான். பாவம்.

    ReplyDelete
  2. கரெக்டா சொன்னீங்க. உதித் நாராயண் பையன் கூட இப்ப கிட்டத்தட்ட அப்படிதான் சுத்திண்டு இருக்கான்.

    ReplyDelete