Tuesday, June 29, 2010

erichalgal

1. இந்த பொம்மீஸ் நைட்டீஸ் விளம்பரம். என்ன பாத்ததில்லையா?  தேவயானி  வருவாங்களே.. அவங்கள குடும்பத் தலைவியா உணர வைப்பதே இந்த பொம்மீஸ்  நைட்டீஸ்தாங்கற ரேஞ்சுக்கு ஒரு டயலாக். You Tube ல அந்த ad தேடி பாத்தேன். கிடைக்கல (நல்ல காலம் போல உங்களுக்கு!). ஆனா எனக்கு அந்த link கெடச்சதும் கட்டாயம் பகிர்ந்து கொள்கிறேன். After all, யான் பெற்ற இன்பம் பெற வேண்டாமா இவ்வையகம்?

2. இதோ சில வாக்கியங்கள்:
"தங்கலை எப்படி உனர்ந்து கொல்லுகின்றன....... "  (தங்களை எப்படி உணர்ந்து கொள்கின்றன....")  
"தமிளன் இளந்து விட்ட பன்பாடுகலை...."   (தமிழன் இழந்து விட்ட பண்பாடுகளை...")
மேற்கூறிய பொன்வரிகள் பேசப்பட்ட இடம் : கோவை  செம்மொழி மாநாட்டுலதான்.

3. உண்மையான திறமை இருப்பவர்களை எல்லாம் eliminate செய்து விட்டு, நிறைய டிராமா செய்து, TRP க்கு உதவுபவர்களுக்குத்தான் பல reality show க்களில் title வழங்குகிறார்கள். இதே மாதிரியான ப்ரோக்ராம்கள் அக்காலத்தில் இருந்திருந்தால்  ஜானகி, சித்ரா, எஸ்.பி.பி ஆகியோர், முதல் சில சுற்றுக்களிலேயே தோற்று போய் இருப்பார்களோ என்று தோன்றுகிறது.

4. இரட்டை அர்த்த வசனங்களையே பெரும்பாலும் பின்பற்றும் சில நகைச்சுவை(?) நடிகர்கள்.

5. பெரிதாக ஒன்றும் சாதிக்காதவர்கள் எல்லாம் மாபெரும் மேதைகள் போல சில நிகழ்ச்சிகளில் பேசுவதும், அறிவுரை வழங்குவதும்.

இன்னும் பல எரிச்சல்கள் இருக்கு. இப்போதைக்கு இது போதும்னு நிறுத்திக்கிறேன்.

பின்குறிப்பு : தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டால் இந்த எல்லா எரிச்சல்களும் போய் விடுமே என்று எனக்கு அறிவுரை சொல்ல நினைப்பவர்கள் தயவு செஞ்சு ஓடி போயிடுங்க, சொல்லிட்டேன்... ஆமாம். 

2 comments:

  1. நானும் உங்க கட்சிதான். தொலைகாட்சியை பாத்து B.P. எகிறும். அனாலும் விடாமே பாக்கறது அப்புறம் லபோ திபோன்னு அடிச்சுக்கறது. அதுவே ஒரு தனி சுகம் தான்.
    அப்புறம் இந்த shah rukh கான், karan Johar இவங்க வர ப்ரோக்ராம் எல்லாம் விடாமே பாத்துட்டு அப்புறம் 'இவா எல்லாம் நம்பளை
    முட்டாள்னு நினைச்சிண்டிருக்கா" அப்டீன்னு கூச்சல் போடறது.
    இதுதான் என் முழு நேரத் தொழிலே.

    ReplyDelete
  2. Welcome here! Naa indha hindi channelgal kittakave poradhu kedyadhu.. tamil channelgal la enna nadakkaradho, adhu*10 times anga nadakkara koothu! Aana neenga sollara madhiri, paakaradhulayum kuraichal kedayadhu, apparam polambaradhulayum kuraichal kedayadhu.:)

    ReplyDelete