வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசைதான். ஆனால் யாருமில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துவது? சரி விஷயத்துக்கு வரேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்தப் பக்கமே வரவில்லை. காரணம் என்று யோசித்தால் இதுதான் என்று ஒன்று கூட தோன்றவில்லை. அத்தியாவசியமான விஷயங்களுக்கே நேரமில்லாது போன நிலையில் , எழுதுவது என்பது ஒரு ஆடம்பரம் போல் ஆகி விட அப்படியே விட்டு விட்டேன். இன்று ஏனோ தெரியவில்லை... மனதில் ஒரு இனம் புரியாத சஞ்சலம். எழுத வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி வந்து போக, மீண்டும் இங்கு காலடி எடுத்து வைத்துள்ளேன்.
என்னதான் நடக்குதுன்னு பாப்போம். இந்த தடவையாவது தொடர்ந்து எழுத முடிஞ்சா சந்தோஷம்தான்.
யாரவது தப்பித் தவறி இந்த பக்கம் வந்து இத படிச்சீங்கன்னா உங்கள்ளுக்கு ஒரு ஹலோ மற்றும் நன்றி.
இனி அடிக்கடி எழுதுவேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. :)
அடுத்த பதிவில் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து (யாருமில்லாத கடையில் .....!) விடை பெறுவது உங்கள் குறும்புக்காரி.